செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

யோகவும் நானும்...!

அல்-எய்ன்  பயணம் - Al-Ain Trip

யோகவுக்காக போட்ட விடுமுறையின் நிறைவாக, கடந்த வெள்ளிக்கிழமை எங்காவது சற்று தூரமாக சென்று வரலாம் என எங்க குடும்ப நண்பர் முகுந்தன் சார் கூட சேர்ந்து முடிவு செய்தோம். ஏன்னா, அவர்கிட்ட தான் வண்டி இருக்கு... :) :) :) 

நம்மகிட்ட வண்டியேது???. எல்லாம் நண்பர்களின் உதவியினால் தான், சகல இடங்களுக்கும் சென்று வந்துள்ளோம் :) 

அல்-எயின் போய் பார்க்கலாம் என முடிவானது. அல்-எயின் என்பது துபாயில் இருந்து சுமார் 100கி.மீ தூரத்தில் அமைந்துள்ள அமீரகத்தின் Garden City. நிறைந்த மரங்களால் சூழப்பட்ட நகரம். அங்கங்கே விவசாயமும் நிறைய இருக்கும். குளிரூட்டப்பட்ட இண்டோர் விவசாய முறை. இந்நகரின் சிறப்பம்சம் என நிறைய இருக்கிறது.

அதில் பிரசித்தி பெற்றது Zoo. அமீரகத்தின் மிகப்பெரிய விளங்கியல் பூங்கா. வெள்ளை சிங்கம், வெண்புலி, பென்குயின் என அரிய வகைகளும் காண இயலும். வெயிலின் காரணத்தால், அதிக நேரம் வெட்ட வெயிலில் சுற்ற முடியாததால், குளிர் கால டிரிப்பாக இருக்கட்டும் என அட்வான்ச் புக்கிங்ல ஒத்தி வெச்சிட்டோம்.

இங்கு தற்சமயம் வெயில் நம் டிக்கியை பஞ்சராக்குவதால்மதியம் மூணு
ணிக்கு தான் வீட்டிலிருந்து புறப்பட்டோம்.

முதலில் hili archaeological park சென்றோம். மொட்ட வெயிலில், பார்க்கின் வாட்ச்மேன் தவிர ஒருத்தரும் இல்லை. மிகப்பெரிய பூங்கா,குளிர்காலத்தில் வார இறுதியில் பொழுதுபோக்க நல்ல அருமையான இடம்இதன் சிறப்பு UNESCO world heritage site. உலக பாரம்பரிய இடங்களில் ஒன்று.2000-2500 BC ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்கள் இங்கு வாழ்ந்த தடையங்கள் இருக்கும் இடம். பொக்கிஷமாக பாதுகாக்கிறார்கள்

புகைப்படங்களை பாருங்கள்.
UNESCO WORLD HERITAGE 
அந்த காலத்து சமாதி (2000-2500 BC )





அடுத்து, அல்-அய்ன் ஒயாசிஸ் என்ற ஈச்சமர தோட்டங்கள் நிரம்பிய பாலைவன சோலை. இது மிகப்பெரிய நிலப்பரப்பில் அமைந்துள்ளது
பெரிய நிலப்பரப்பு - அதனால் காரிலேயே போகலாம்
நாங்கள் வண்டியை பார்க் செய்து நடக்க எத்தனிக்கையில், ஒரு தமிழ் குரல். சார், காரிலேயே போங்கள் என்று. யாரென்று பார்த்தால், அதன் வாட்ச் மேன், இலங்கை தமிழர். நாங்கள் பேசுவதறிந்து, தமிழில் பேசினார்.

பல வகையான பேரிச்சம் பழம்

மற்றொரு வகை
இவ்வாறு கிட்டதட்ட நூறு வகை இருக்கு

அற்புதமான இடம். அமீரகத்தில் உள்ள பலரும் கூட அறியாத இடம் இது. பேரிச்சம் பழங்கள், கிட்டதட்ட நூறு வகைக்கும் மேல இருக்கும் தோட்டம் என நினைக்கிறேன்.

காரில் சிறிது சென்று ஓரமாக நிறுத்திவிட்டு, தோட்டத்தின் உள் நுழைவோம். அனைத்தும் பழுத்து உண்ண எங்களுக்காக காத்திருந்தது போல :). ஒன்னைக்கூட விடலை. எத்தனை ருசி... அட அட அட... சூப்பர்...

இன்னொரு விஷயம், நம் ஊரில் இருப்பது போல வாய்க்கால் வழி தண்ணீர் தான் தோட்டம் முழுவதற்கும். மேலும் மற்றொரு அதிசயம், இத்தண்ணீர், நம்மூரில் இருப்பது போல போர்வெல் தண்ணீர், நம்ப முடிகிறதா! பாலைவன நிலத்தில் நிலத்தடி தண்ணீர்... உண்மையான பாலைவனத்தின் சோலை...!
வாய்க்கால்

மரத்தில் நார்த்தங்காய் பறிக்குறாங்க


வாய்க்காலில் விளையாட்டு யோகவ்விற்கு
அடுத்து, அங்கிருந்து ஜபல் ஹஃபீத் எனும் அமீரகத்தின் மலை உச்சிக்கு சென்றோம். இது கிட்டதட்ட நம்ம மருதமலை உச்சி போலவும், பழனி கோவில் உச்சி போல நினைத்துக் கொள்ளுங்கள். வண்டியில் வளைவுகளில் போக சூப்பரா இருக்கும்.

Jabel Hafeet - View of Al Ain City from mountain




குளிர்காலத்தில் சென்றால், மூடுபனி நம்மளை படர்ந்து, பற்கள் டேன்ஸாட போயிடும் :). இன்றோ, சூடு ஓட ஓட்டம் விரட்டுது. முடிந்து கீழே அடிவாரத்தில் வெந்நீரூற்று இருக்கும். அங்கு சென்றோம். இது அனைத்தும் இயற்கையின் விந்தை. அங்கு எக்கசக்க கூட்டம்.

கொண்டு போன சோத்துமூட்டையை அவிழ்த்து சாப்பிட்டால், ஹாட் பாக்ஸ்ல வைத்தது போல சூடாவே இருந்தது.

அருமையான டிரிப் :)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக