வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

The Alchemist - இறுதி பகுதி

முதல் பகுதி படிக்க
http://nondavan.blogspot.com/2013/02/the-alchemist.html

இரண்டாம் பகுதி
இவனும் அந்த அந்நிய பையன் மேல் நம்பிக்கை வைத்து அவனையே பின்தொடர்கிறான். மார்க்கெட்டில் சற்று கூட்டம் அதிகமாக இருக்கவே வைத்த கண் வாங்காமல் அவனை பின்தொடருகிறான். மார்க்கெட்டின் ஓர் இடத்தில் போர்வாளின் கலைநயம் இவனை சில மணிதுளிகள் கட்டிப்போடவே உறைந்து அதைக்காணுகையில், வழிகாட்டும் அந்தையகாணவில்லை. பிறஅவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அக்கடைகாரன் இவனை எச்சரித்தது இதுதான் என தற்போதுதான் உணர்கிறான். தன் பையில் ஏதேனும் தேறுமா? என பார்க்கையில் ஒரு பைசாக்கூட இல்லை. தன் விதியை நினைத்து நொந்துக்கொள்கிறான். மிகுந்த குழப்பத்தில், மெல்சிஜெடெக் கொடுத்த உரிம் & துமிம் கற்களைக்கொண்டு தன் புதையலைத்தேடி பயணம் தொடரலாமா அல்லது நாட்டிற்கே திரும்பலாமா என பார்க்கிறான். தொடரலாம் என விடை கிடைக்கவே மார்க்கெட்டை கடந்து ஒரு சிறிய மலைமீது ஏறி மிகந்திரத்ுடன் பயணிக்கிறான்.

கையில் நையைசூட இல்லை, கடும்பசியின் காரணத்தால் ஒரு படிகக்கடையின் (Crystal Shop) வாசலில் நின்று அதன் முதலாளியிடம், ான் கடையின் சன்னல்களை துடைக்கிறேன், அதற்கு பதிலாக தனக்கு உணவு தருமாறு கூறிவிட்டு அவரின் பதிலுக்கு காத்திருக்காமல் சுத்தப்படுத்த ஆரம்பிக்கிறான். அச்சமயம் சில வெளிநாட்டவர்கள் வந்து சில பொருட்களை வாங்குகிறார்கள். கடையின் முதலாளி, இை நல்லுனாகார்க்கிறார்.ேலும் இவனை அழைத்துக்கொண்டு சாப்பிட போகிறார். இவன் கதையை கேட்டவுடன், இங்கேயே வேலை செய்ய சம்மதமா என வினவுகிறார். இன்று ஒரு நாள் வேலை செய்கிறேன்; அதற்கான பணத்தில் எகிப்து செல்லும் நோக்கத்தை கூறுகிறான். கடைக்காரர், எகிப்து செல்ல நீ என்னுடன் ஓராண்டுக்கு மேலாக வேலை செய்தாலும் கூட செல்வது கஸ்டம், அது வெகுதொலைவில் இருக்குமென்று எடுத்துரைக்கிறார். வேணுமென்றால் ஊருக்கு போக பணம் தரேன், நாளையே ஊருக்கசெல் என உதவ முன்வருகிறார். இவன் சிறிது நேரம் பிலும் சொல்லாமல், இறுதியாக வேலை செய்ய சம்மதிக்கிறான்.

படிகக்கடை முதலாளியின் வாழ்க்கையும், கடையின் நிலைமை பற்றியும் இச்சந்தர்ப்பத்தில் அறிகிறான். கடையில் தொழில் சூடுப்பிடிக்கிறது. இவனுடைய ஒரே குறிக்கோள், கடுமையாக உழைத்து வேண்டிய பணத்தை சேர்த்துக்கொண்டு ஆட்டுமந்தைகள் வாங்கிக்கொண்டு எகிப்து நோக்கி செல்வதே. கடை பெரியவர், பொதுவாக ரிஸ்க் எடுக்க தயங்குபவர்; நல்ல மனிதர்; இவனின் தேடலின் தீவிரத்தை இவனைவிட நன்கு உணர்ந்தவர். இவனும் கடைக்காரரின் வாழ்க்கை பற்றிய கண்னோட்டமும், கனவு காண்பதின் முக்கியத்துவத்தையும் அவரிடம் கற்கிறான். 

11 மாதத்தில் கடை வியாபாரம் நன்கு வளர்ச்சியடைகிறது; இவனுக்கும் கமிஷன், சம்பளம் என நன்கு கவனித்துக்கொள்கிறார் அக்கடையின் முதலாளி. இதனால் வேண்டிய கையிறுப்பு பணமும் கிடைக்க வேலையில் இருந்து விடைப்பெறுகிறான்.

தான் முன்பு ஏமாந்துப்போன அதே பாரில் 11 மாதம் கழித்து மீண்டும் போய் அமர்கிறான். ஊருக்கு சென்று தன் பெற்றோர்களை சந்த்தித்துவிட்டு தன் பயணத்தை தொடரலாம் என்றவனுக்கு, கேரவேன் ஒன்று அல் ஃபயூம் (எகிப்தின் பாலைவனச்சோலை) நோக்கி செல்கிறது என்ற தகவல், திசை திருப்புகிறது. அங்கு ஒரு ஆங்கிலேயன் அறிமுகமாகிறான். காரோட்டுனர், தன்னுடைய சட்டதிட்டங்கள் பற்றிக்கூறி அனைவரையும் வண்டியில் ஏறச்சொல்கிறார். அதில் பலதரப்பட்ட நபர்கள் பயணிக்கிறார்கள். 


பயணத்தின் ஊடே இருவருக்கும் இடையில் நல்ல நட்பு மலர்கிறது. ஆங்கிலேயன், தான் ஒரு மிகப்பெரும் அல்கெமிஸ்டாக (ரஸவாதியாக) முயல்வதாகவும், எகிப்தில் 200 ஆண்டுகள் உயிர்வாழும் சிறப்புமிக்க அல்கெமிஸ்ட் (ரஸவாதி) இருப்பதாகவும், அதற்காகத்தான் இப்பயணம் என தன் பயனத்தின் காரணத்தை கூறுகிறான். எகிப்தில் இருக்கும் ரஸவாதியால் எந்த உலோகத்தையும் தங்கமாக மாற்ற முடியும் என கூறுகையில் அதிசியக்கிறான். இப்படியெல்லாம் உலகத்தில் இருக்கிறார்களா என தனக்குள் சிந்திக்கிறான். 

இவன் வானத்தை, நட்சத்திரத்தை, காற்றை, சூரியனை என இயற்கையை, அதன் மொழியை அறிய முற்பட்டு அதில் ஒரு ஆனந்தம் காண்கிறான். மேலும் இவன் ஆங்கிலேயனை பார்க்கையில் அவன் எதிலும் நாட்டமில்லாமல் நிறைய புரியாத புத்தகங்களுடன் எந்நேரமும் பயணிக்கிறான். இடையில் ஒட்டகத்தின் ஓசையை கவனித்து, அதன் மொழியை ஆடுகளின் மொழிப் போலவே இயல்பாக அறியமுடிகிறது. தன் ஆத்மா சொல்வதை எந்த தொந்தரவும் இல்லாமல் கேட்க முடிகிறது. இடையில் பழங்குடியினர் சண்டை காரணமாக தங்களின் பயணம் தடைப்பட்டு தடைப்பட்டு தொடர்கிறது.

ஒரு வழியாக, அல் ஃபாயூமை அடைகிறார்க்ள். (அல் ஃபயூம் என்பது நைல் நதிக்கரையின் படுகையில் அமைந்துள்ள ஒரு அற்புதமான பாலைவனச்சோலை.) இங்கு தங்கிருக்கையில் ஃபாத்திமா என்ற அழகு தேவதையை காண்கிறான். அவள் பழங்குடியின தலைவரின் மகள் என அறிகிறான். பொதுவாக அரபிப்பெண்களின் கட்டுப்பாடு மிக அதிகம். அதையும் மீறி அவளுடன் பேச முயலுகிறான். சில நாட்களில் இருவரும் காதல் கொள்கிறார்கள். இருவருக்குமான காதல் அவ்வளவு அருமையாக இருக்கும்... தமிழ் பதிப்பில் பின்னிபெடல் எடுத்திருப்பாங்க என்று நினைக்கிறேன்.

தான் கற்ற உலக மொழியின் மூலம் பழங்குடியின தலைவருக்கு ஆருடம் கூற, அது அப்படியே நடந்தேறுகிறது. அதன் காரணமாக அவர்களின் கூட்டத்திற்கு ஆலோசகராக (கவுன்சிலர்) ேர்வாகிறான். இதன் பொருட்டு இவனுக்கு நிறைய பொற்காசுகளம், வசதியும் செய்து தருகிறார்கள். தன் லட்சியத்தை விட்டுவிட்டு இவளுடனே காலத்தை கடக்கலாம் என்ற என்ணம் வருகிறது. இச்சந்தர்ப்பத்தில் எதேச்சையாக ரஸவாதியை காண்கிறான். அவரின் மேல் உள்ள ஈர்ப்பால் அவரை பின்தொடர்கிறான்.

காதலா? லட்சியமா? என்ற தடுமாற்றம் ஏகத்திற்கு வருகிறது. ஃபாத்திமாவுடன் வாழ முடிவெடுக்கும் போது, அல்கெமிஸ்ட் (ரஸவாதி) அறிவுரை கூறுகிறார். மனம்மாறி ஃபாத்திமாவிடம் தன் லட்சியத்தை நோக்கி செல்வதாகவும், தான் மீண்டும் திரும்பி வந்து மனமுடிப்பதாக கூறுகிறான். 

அவளிடம் விடைபெற்று ரஸவாதிவுடன் எகிப்து பிரமிட் நோக்கி தன் பயணத்தை தொடர்கிறான். ரஸவாதியிடம் உலோகத்தை தங்கமாக மாற்றும் வித்தையை கற்றுத்தருமாறு அடிக்கடி வினவுகிறான். (அல்கெமிஸ்ட்) ரஸவாதி தன்னை தானே உணரும் வாயிலாக, உலக மொழி கற்களாம் என்ற உண்மையை பல உதாரணங்களுடன் கூறுகிறார். 

தங்களின் பயணத்தில், ஒரு பழங்குடி இன கும்பல் இவர்களை ஒற்றர்கள் என சந்தேகப்பட்டு, சிறை வைக்கிறார்கள். ரஸவாதி, தாங்கள் ஒற்றர்கள் இல்லையெனவும், இத்தலைவனை காண பை நிறைய பொற்காசுகளை இப்பையன் கொண்டு வந்துள்ளான் எனவும், இவனின் ஆற்றல் மகத்தானது எனவும், காற்றோடு காற்றாக பப்பான் என்று அனைவரையும் வியக்க வைக்கிறார். அப்படியெனில் ரெண்டு நாட்களில் காற்றோடு காற்றாக பறப்பதை காண்பிக்குமாறு கட்டளையிடுகிறான். இவன் திடுக்கிட்டு அல்கெமிஸ்டை பார்க்கிறான். தன்னுடய பொற்காசுகளால் ரெண்டு நாள் சாவை தள்ளிப்போட்டுள்ளதாக கூறும் அல்கெமிஸ்ட், முயன்றால் முடியும் என்றும் இவனுக்கு அந்த ஆற்றல் இருப்பதாகவும் தெம்பூட்டுகிறார். 

மூன்றாவது நாள், தலைவனின் கட்டளைக்கிணங்க இவன் தன் மனதை ஒருநிலைப்படுத்தி இயற்கையுடன் பேச முயலுகிறான். இதில் பூமியிடனும், காற்றுடனும், சூரியனுடனும் பேசி அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்குகிறான். இவன் காற்றுடன் பேசுகையில்  முன்பெப்போது இல்லாத வகையில் சூறாவளிக்காற்று அங்கு வீசுகிறது. அனைவரும் அல்லாவின் (கடவுளின்) கருணை என மெச்சுகிறார்கள். கடைசியாக இவன் காற்றால்  அடித்து வேறொரு இடத்தில் நிற்கிறான். தான் செய்த செயலை தன்னாலேயே நம்ப முடியாமல் அல்கெமிஸ்டிடம் திளைக்கிறான். அப்பழங்குடியுனர் மிகுந்த ஆனந்தத்தில் இவர்களுக்கு பிரியா விடை கொடுத்து வழியனுப்புகிறார்கள். 

இருவரும் தங்களின் பயணத்தை மீண்டும் பிரமிட்டை நோக்கி தொடர்கிறார்க்ள். வழியில் ஒரு துறவி வீட்டில் அடைக்களம் கேட்டு அடைகிறார்கள். அல்கெமிஸ்ட், அடுப்பறைக்கு சென்று வெரும் பத்ிரத்(உலோகத்தை) உருக்கி தங்கமாக மாற்றிக்காட்டுகிறார். 4 பங்காக பிரித்து, இரண்டை இவனுக்கும், ஒன்றை துறவிக்கும் தருகிறார். துறவி அதைப்பெற மறுக்கையில், தங்களிடம் இருக்கட்டும், இவன் மீண்டும் திரும்புகையில் தேவைப்படினெனில் உங்களிடம் வந்து பெற்றுக்கொள்ளட்டும் என அல்கெமிஸ்ட் கூற, அதை பெற்றுக்கொள்கிறார் துறவி. 

மேலும் இவனிடம் இருந்து விடைப்பெற்றுக் கொள்கிறார். தான் வந்த பாதையிலேயே பயணிக்கிறார். இவன் பிரமிட்டை அடைந்து, அங்கு பூமிக்கியில் தோண்ட ஆரம்பிக்குறான். மிகுந்த சோர்வடைகையில் அங்கு சில திருடர்கள் வந்து இவனை சூரையாடுகிறார்கள். பலத்த அடி, ரத்த வெள்ளத்தில் இருக்கும் இவனிடம் அனைத்தையும் எடுத்துச் செல்கிறார்கள், அல்கெமிஸ்ட் கொடுத்த தங்கத் தட்டின் இரண்டு பங்கு உட்பட. வாழ்க்கை வெறுத்து தான் பயணித்த பாதையை நினைத்துப்பார்க்கையில் தான் அடைந்த அனைத்தையும் நினைத்து பெருமிதம் கொள்கிறான். 

இடையில் சேலத்தின் அரசன் மெல்சிஜெடெக் சொன்ன ஒரு கோடாளி கதை நினைவு வரவே, முயற்சியை விடாமல் மீண்டும் தோண்டுகையில் ஒரு புதையல் அகப்படுகிறது. மெல்சிஜெடெக்கின் கவசம் போலவே ிலைமிக்குடியையல் கிடைக்கிறது. மனதில் ஃபாத்திமாவை நோக்கி செல்வதையும், மனமுடித்து ஸ்பெயினுக்கு செல்வதையும், அந்த மூதாட்டிக்கு பத்தின் ஒரு பங்கு மறக்காமல் கொடுக்க வேண்டும் என்ர எண்ணத்துடன் நிறைவடைகிறது கதை.

என் கத்

படிக்க எந்த இடத்திலும் Bore அடிக்கவோ, சோர்வாகாத எழுத்து நடை. அதே போல இப்புத்தகம் எப்படி ஆறதை கோடி விற்றது என்னும் எண்ணம் தோன்றாமல் இல்லை. இன்னும் இப்புத்தகம் உலகில் அதிகம் விற்கப்படும் நாவலின் பட்டியலில் உள்ளது. கட்டாயம் படிக்க வேண்டிய நாவலில் இதுவும் ஒன்று, அட்லீஸ்ட் அதில் என்ன இருக்கு என்று நீங்கள் அறியவேனும். (நான் செய்தது போல :) ) நம்ப முடியா பல காட்சிகள் இதில் அரங்கேற்கிறது.சுவாரஸ்யம் கி பிற்பி நிறையுருக்கிவிட்டேன். ீங்கள் பித்ால் உணர்வீர்கள். மேலும், ிழில் ூள் கிளப்பாம் என்றோன்றுகிறு. 


இக்கையில் கையின் நாயன் ’சண்டியாகோ’ ெயர் ஒன்றோ இரண் ுறை மட்டுமஆரம்பத்ில் வும். நாவல் முழுவும், பையன் என்று மட்டுமே இருக்கும். அே பாணியில் நானும், பெயர் குறிப்பிடாமல் எழுயற்சித்ேன். அால் ான், இவன் என்று எல்லா இடத்ிலும் போட்டுள்ளேன்.

பௌலோ கோல்ஹோ ஒரு பாதியாரா இருப்பாரோ என்று எண்ணத் தோன்றியத, எனக்கு. ஆனால், இவரின் அடுத்த நாவல் 'Eleven minutes' வாங்கி படிக்கையில் அப்படியே ஆடிப்போயிட்டேன். முற்றிலும் மாறுதலான கதை, எழுத்து நடை. அதில் ஆரம்பமே அமர்க்களம்.


மேலும் ஒரு விஷயம் சொல்லியாக வேண்டும். ஆங்கில நாவல் என்றாலே ஏதோ கஷாயத்தை சாப்பிடுவது போல முகம் கோணலா போகும் எனக்கு. பல சொற்களுக்கு டிக்‌ஷினரி தேவைப்படுமே என்ற உண்மை தான். ஏனெனில் நம்ம ஆங்கில புலமை அப்படி...!! 

ஒரு சின்ன ஃபிளாஷ்பேக் - நான் பள்ளி பயின்றபோது எனது ஆங்கில வாத்தியார் When are you getting up in the morning to come to school’ என்ற கேள்விக்கு, 9.30 சார் என்று சத்தம் போட்டு சொன்னேன். என் புரிதலில் எத்தனை மணிக்கு ஸ்கூலுக்கு வருவாய் என்று கேட்கிறார் போல என நினைத்துக்கொண்டேன் JJJ. பள்ளியே சிரித்தது. எதுக்குடா சிரிக்கிறீங்க் என்று ஒன்னும் அறியாதவனாக நண்பர்களை கேட்டேன். மாஸ்டர் என்னை வெளியே நிற்க வைத்துவிட்டார்.... நான் கரெக்டா தானே சொன்னேன் என்று மண்டை குழம்பி போன சம்பவம் என் ஆங்கில புலமைக்கு சான்றுJJJ

துணிந்துதான் களத்தில் இறங்கினேன்
, ஆங்கிலமா நாமா பார்த்திருலாம் ஒரு கை என்று. அதிசயம், என்னை போல தற்குறிகளும் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு எளிமையான ஆங்கில எழுத்துகளால் புரியும் வண்ணம் இருந்தது மிகுந்த ஆச்சர்யம் தந்த விஷயம்.

மேலும் எழுத்தாளர் திரு. சாருவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்; அவர் மூலமாகத்தான் இப்படி ஒரு எழுத்தாளர் இருக்கார் என்றே எனக்கு தெரியும்.

புதன், 20 பிப்ரவரி, 2013

The Alchemist


சமீபத்தில் பிரேசில் நாட்டு எழுத்தாளர் லோ கோல்ஹோவின் (Paulo Coelho) "The Alchemist" என்ற நாவலை படித்தேன். நான் வாசித்ததை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். அதற்குமுன் இந்த புத்தகம் பற்றி சில சாதனை குறிப்புகள்.

1. 65
மில்லியன் (ஆறரக் கோடி) காப்பிகளுக்கு விற்றுத் தீர்ந்த ஒரு நாவல்
2.
உலகி வரலாற்றில் அதிகம் விற்கப்பட்ட ஒரு புத்தகம்
3.
கிட்டதட்ட 71 மொழிகளுக்கு மேல் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒரு நாவல்
4.
வாழும் ஒரு எழுத்தாளரின் நாவலை அதிக மொழிகளில் மொழிபெயர்த்தலால் கின்னஸ் சாதனை பெற்ற ஒன்று


இந்த நாவல் தான்
லோ கோல்ஹோவிற்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தித் கொடுத்ததாம். இக்காரணிகளால் உந்தப்பட்டு இந்த நாவலை வாங்கினேன். இனி நாவலுக்குள் செல்வோம். இ என் முதற்முயற்சி, குறையிருப்பின் என்னை திருத்துக.


கதைச்சுருக்கம் - ஒரு ஆடு மேய்ப்பவன், தன் கனவை நனவாக்க தன் தேடல்களை எகிப்து பிரமிட்டை நோக்கி செல்லும் பயணமும், அதில் அவன் அடையும் அனுபவங்களும், அதில் தன்னை தானே உணர்வதுமே நாவல்.


கதாபாத்திரங்கள்

நாயகன் சாண்டியாகோ எனும் ஆடு மேய்க்கும் பையன்

நாயகி அரபி பழங்குடியின பெண் ஃபாத்திமா

முக்கிய பாத்திரங்கள் – (Melchizedek) மெல்சிஜெடிக் எனும் அரசன், திருடன், அல்கெமிஸ்ட் (ரஸவாதி), படிகக்கடை(கிரிஸ்டல்) முதலாளி, சகபயணி ஆங்கிலேயன் மற்றும் ஒட்டக மேய்ப்பாளர், பழங்குடியின தலைவர், துறவி மற்றும் பலர்


ஆண்டலுசியா (Andalusia) பகுதியில் வசிக்கும் ஒரு ஏழை குடும்பத்தின் வாரிசு சாண்டியாகோ. (ஆண்டலுசியா என்பது ஸ்பெயின் நாட்டின் பிரபலமான சுயாட்சிப்பகுதி). அன்றாடம் கஞ்சிக்கும், சாப்பாட்டிற்குமே திண்டாடும் ஒரு ஏழை குடும்பம். சாண்டியாகோவின் பெற்றோர்கள் இவனை கிருஸ்துவ பாதரியாராக உருவாக்க வேண்டும் என்ற கனவில் இருப்பவர்கள், அதன் மூலம் தன் குடும்பத்திற்கு நற்பெயர் விளையும் என்ற எண்ணம் கொண்டவர்கள். 


பையனின் கனவோ, உலகத்தை அறிந்துக்கொள்ள வேண்டும், உலகத்தின் மொழியை அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதே. பாதரியாராக கடவுளின் மொழியை அறிவதைவிட, பலதரப்பட்ட மக்களின் வாழ்வியலை அறிந்துக்கொள்வது அதற்கும் மேல் (உசத்தி) என்ற தீர்க்கமான எண்ணம் கொண்டவன். ஒரு சண்டையின் இடையில் தயங்கி தயங்கி தன் எண்ணத்தை பெற்றோருக்கு சொல்லி விடிகிறான். தன் தந்தை உலகை அறிய ஆடுதான் மேய்க்க போகனும் என்றதும், அப்படியானால் தான் அதை செய்வதாகவும் கூறுகிறான். தன் தந்தை முதலில் மறுத்தாலும், பையனின் முடிவிற்கு ஒத்துக்கொண்டு, தன் வயலில் கண்டெடுத்த மூதாதயர்களின் 3 தங்க காசுகளை கொடுத்து ஆட்டு மந்தையை வாங்கிக்க சொல்கிறார். குளிர் காலத்திற்கு ஏற்புடைய ஒரு நல்ல ஜாக்கட்டும் கொடுத்து வழியனுப்பி வைக்கிறார். முடிவில் நம் ஊர் தான் உயர்ந்தது என புரிந்து கொள்வாய் என ஆசிர்வதித்து அனுப்புகிறார். தனக்கென ஒரு ஆட்டு மந்தையும், இளைப்பாரும் போது படிக்க ஒரு புத்தகமும், பருந்த வைனும் தன்னுடன் எடுத்துக்கொண்டு பயனத்தை தொடங்குகிறான்.


நம்மாளு, ஆடு போகும் போக்கில் பயனித்து, ஸ்பெயினின் குறுக்கு வெட்டு எல்லாம் சுற்றித்திரிந்து தன் நாட்டின் அனைத்து நகரத்தையும் அறிந்துக்கொள்கிறான். சலிப்பு வரும்போது சில ஆடுகளை விற்று கடற்கரையோரம் சில நாட்களை கடத்துகிறான். பிறகு மீண்டும் ஆடுகளை வாங்கித் தன் பயணத்தை தொடர்கிறான். இந்நாட்களில் ஆடுகளின் மொழியை அறிந்துக்கொள்கிறான். அதன் தேவைகளை, அது எவ்வாறு செயல்படுகிறது, அதற்கும் தனக்குமான ஒரு புரிதலை ஏற்படுத்திக்கொள்கிறான். தனக்கு பணத் தேவைப்படும்போது தன் ஆடுகளை அறுத்து, அதன் தோலை விற்று சமாளித்துக்கொள்கிறான்.

அவ்வாறு சென்ற வருடம் தரிஃபா (Tarifa) நகரம் போனபோது அந்த அக்கடை முதலாளியின் மகளிடம் பழக்கம் ஏற்படுகிறது. அவளின் சிரிப்பில்
, பேச்சில் மயங்கி, அவளின் நினைப்பிலேயே ஒரு வருடம் கழிந்துவிடுகிறது. தற்சமயம் அவளைக்காண இந்தாண்டும் பயணிக்கிறான். அவளிடம் தன் காதலை, எண்னத்தை தெரியப்படுத்த வேண்டும் என நல்ல உடை, முடி திருத்தம், செண்ட் என ஜோராகிறான். இன்னும் 4 நான்கு நாட்களில் அவள் இருப்பிடத்தை அடைந்துவிடுவான். ஓர் பாழடைந்த சர்ச்சில் இரவு தங்குகையில் கனவு வருகிறது. இதே போன்ற கனவு முன்பொரு முறை இவனுக்கு வந்திருக்கிறது. அப்பெண்ணை காண பயணிக்கையில், தரிஃபாவில் கனவுகளின் அர்த்தத்தை சொல்லும் ஒரு மூதாட்டி இருக்கிறாள் என செவிவழியாக கேட்ட செய்தி இவனை ஆர்வப்படுத்துகிறது. தன் கனவின் அர்த்தம் என்னவென அறிய ஒரு முற்படுகிறான்.


இருவருக்கான உரையாடலில், கனவில் தன் ஆடுகளுடன் குழந்தை ஒன்று விளையாடுவது போலவும், திடீரென்று அக்குழந்தை இவனை மட்டும் அலேக்காக தூக்கிச்சென்று எகிப்து பிரமிட்டை காட்டுவது போலவும் மாட்டியிம் சொல்கிறான். ரெண்டு முறையும், அதற்கு மேல் தடங்கள் ஏற்பட்டு விழித்துக் கொள்வதாக முடிக்கிறான்.
 
மூதாட்டி முழுவதுமாக கேட்டுவிட்டு, இது கடவுளின் மொழி.... உன் கின் அர்த்ம், நீ எகிப்து நோக்கி பயணம் செய்தால் அறிய புதையல் கிடைக்குமென சொல்கிறாள். குழந்தை வுவால் ஒரு குள் காட்டும் சுகுனம் எஅன்வும் கூறுகிறாள். மூதாட்டிக்கு சன்பானப்பணம் வேண்டாம் எனவும் அதற்கு பதிலாக புதையல் கிடைத்தால் அதில் பத்தின் ஒரு பங்கு வேண்டும் எனவும் உரிமையுடன் கூறுகிறாள். கிடைக்காவிட்டால் என இவன் ஐயமெழுப்பும் போது,  தனக்கு கல்சல்டேஷன் ஃபீஸ் கிடைக்காது அவ்வளவே என சிரிக்கிறாள்.


என்ன செய்வதென்று குழம்பிப்போய், நாம் செய்வது போலவே தன் ஃபிகரை (அப்பெண்ணை) காண பயனத்தை தொடர்கிறான். வெயில் அதிகமாக இருக்கவே, ஊரின் நடுவில் இருக்கும் வணிக வளாகத்திற்கு முன்பாக இளைப்பாறி புத்தகத்தை வாசிக்கிறான். அச்சமயம் ஒரு பெரியவர் இவனிடம் பேச முற்பட, தனது வாசிப்பின் தீவிரத்தால் பேசுவதை இடைஞ்சலாக பார்க்கிறான்,.... அந்த பெரியவர், இவனிடம் வம்மடியாக சற்று பேச, யாரென பரஸ்பரம் வினவுகிறார்கள்.

அதில் அப்பெரியவர்
, சேலத்தின் அரசன் மெல்சிஜெடெக் என கூறுவதைக் கண்டு திகைக்கிறான். ஏனெனில் சேலம் என்பது மர்மமான வெகுதொலைவில் இருக்கும் ஒரு ஊர் என பைபிலில் நம்பப்படுகிறது. (மெல்சிஜெடெக் என்பவர் ஹீப்புரு பைபிலில் வரும் ஒரு கதாபாத்திரம். மிகவும் தூய்மையானவர், உயர்ந்த கடவுளுக்கு போதித்தவர், சாகாவரம் பெற்றவர்.) அவர் நீண்ட சாதாரண அரபி உடைபோல அணிந்துள்ளார். ஒரு மரக்குச்சியை எடுத்து மண்ணில் எழுதுவதற்கு முன்பாகதன் உடையை சரிச்செய்யும் தருணம் தன் கண்முன்னால் ஒரு மாஜிக் நிகழ்வது போல ஒரு ஒளிக்கீற்று வந்து மறைவதாக உணர்கிறான். மறுகனத்தில் மண்ணில் பையன் பெயரும், இவனுடைய பெற்றோர்களின் பெயரும், இவன் சந்திக்கப்போகும் பெண்ணின் பெயரும் எழுதுவதைக் கண்டு பிரம்மிக்கிறான். 


இதைக்கண்டவுடன் மெல்சிஜெடெக்குடன் பேச ஆர்வமடைகிறான். ஒவ்வொருவருக்கும் தன் இளம்வயதில் தனக்கென ஒரு கனவு இருக்கும். அதை அடைய எந்த தயக்கமின்றி ீவிராக முயலுவார்கள். நாட்கள் செல்லச்செல்ல தேங்கி, தன்னால் முடியாதோ என்ற தாழ்வு மனப்பான்மையில் ஒதுங்கிவிடுகிறார்கள் என கூறுகிறார், சேலத்தின் அரசன். அவரே தொடர்ந்து, உலக ஆத்மா பற்றியும், மனிதனின் தனிப்பட்ட நோக்கம் பற்றியும் முதல்முறையாக இப்பையனுக்கு விரிவாக கூறுகிறார். மேலும், எவனொருவன் தன் கனவை, நோக்கத்தை (Personal Legend) அடைய பாடுபடுகிறானோ, அவனுக்கு இப்பிரபஞ்சமே தன் பின்னால் வந்துதவும் என அலுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கிறார். மக்களை வழிநடத்த சகுனங்களை கடவுள் காட்டுவார் எனவும் கூறுகிறார். இக்கதையின் அடிநாதமே இங்குதான் தொடங்குகிறது. (என்ன இப்பவே மூச்சு முட்டுடா.. தண்ணிய குடிங்க... தண்ணிய குடிங்க,  இன்னும் எவ்ளோ தூரம் போகனும் நாம)


மிகுந்த ஆர்வமடைந்து, அப்படியானால் தன்னுடைய கனவு, வாழ்க்கையின் நோக்கம் (Personal Legend) என்ன என்று மெல்சிஜெடெக்கிடம் கேட்கும்போது, உன்னிடம் இருக்கும் ஆட்டு மந்தையின் ஒரு பகுதியை எனக்கு கொடு. நான் நாளை பதில் தருகிறேன் என கூறிவிட்டு விடைபெறுகிறார். இவன் குழப்பத்துடனே, அங்கு அருகில் சுற்றி திரிகிறான். 

அடுத்த நாள், ஒரு முடிவோடு தன்னுடைய மந்தையில் இருந்து 6 ஆறு ஆடுகளை கொடுக்கலாம் என அழைத்து வருகிறான். மெல்சிஜெடெக், அதைப் பெற்றுக்கொண்டு எகிப்து நோக்கி பயணி, அங்கு பிரமிட் அருகில் புதையல் இருக்கும் என சொல்வதை கேட்டு அதிசியக்கிறான். ஏனெனில், மூதாட்டி ஜோசியர் சொன்னதும் அப்படியே இருக்கே என எண்ணுகிறான். அங்கிருக்கும் கோட்டையின் உச்சிக்கு இருவரும் பேசியபடியே மேலேறுகிறார்கள். அரசன் பல தத்துவ கதைகளும் இதனூடே கூறுகிறார். 

அரசன் இவனிடமிருந்து விடைபெறுவதற்கு முன், தன் நவரசகவசத்தில் இருந்து உரிம் & துமிம் தெய்வீக கற்களை தருகிறார். இதை வாழ்க்கையில் தீர்மானிக்க் முடியா சமயங்களில் உபயோகப்படுத்துமாறும், இவனுக்கு வழி காட்டும் என கூறுகிறார். உரிம் என்றால் இல்லை, துமிம் என்றால் ஆம் என்பது அர்த்தம். ஆம், இல்லை என்று பொருள் படும்படியாக மட்டுமே கேட்க முடியும் என கூறிவிட்டு மறைகிறார். 

நம் ஹீரோ பையன் கோட்டையின் மேல் நின்று அக்கரையில் பரந்து விரிந்த ஆப்பிரிக்காவை காண்கிறான். எகிப்ு சென்று பையஅடையாம் என ீர்மானிக்கிறான், அுவன் வாழ்வின் நோக்க. ன ிடானம்பிக்கிறக்கிறு. தன்னிடம் இருக்கும் அனைத்து ஆடுகளையும் விற்றுவிட்டு அக்கரையில் உள்ள ஆப்பிரிக்காவிற்கு கப்பலில் அன்ு இரபயணிக்கிறான். ஒரு இரவு பயணத்தில் ஆப்பிரிக்க எல்லை நகரமான தாங்கியர்ல் (Tangier- மொராக்கா நாட்டில் இருக்கும் ஒரு சிறிய துறைமுகம் கொண்ட நகரம்) தரை இறங்குகிறான். அவ்வூரில் இருக்கும், நடக்கும் அனைத்துமே வித்தியமாசமாகப் படுகிறது இவனுக்கு. அவர்களின் அரபி மொழி, உடை, திடீரென்று எல்லோரும் ஒன்றாக அல்லாவை மண்டியிட்டு வணங்குவது என மார்கெட்டில் ஒவ்வொன்றாக காணிகையில் ஒரு பார் கண்ணில் பட, அங்கு செல்கிறான்.

நீளம் கருதி ரெண்டாம் பகுதியை நாளை தொடர்கிறேன். 

திங்கள், 4 பிப்ரவரி, 2013

Life of Pi 3D Movie



 இந்த படம் பார்த்து கிட்டதட்ட ஒரு மாதம் மேலே இருக்கும். ஆனால் என்னில் இப்படம் உருவாக்கிய தாக்கம் மிகப்பெரியது. அதற்கான விடையை தேடிக்கொண்டே இருக்கிறேன், சிக்கியப் பாடில்லை. உங்களுடன் பகிர்ந்தால் அதற்கு விடை கிடைக்குமா என்பதன் விளைவே இப்பதிவு. 


இதுவரை 3D படம் என்றால், மை டியர் குட்டிச்சாத்தான்’ படம் தான் என் நினைவின் அடுக்கில் இருந்தது. ஒரு ஐஸ்கிரீமும், திராட்சை தட்டும் நம் கண்முன் வருவதும், ஈட்டி நம்மை நோக்கி வீசுவது போன்ற ரெண்டு காட்சிகள் தான் 3டியின் பிம்பமாக நம் ஏனைய பேருக்கு இருக்கும், எனக்கும் அப்படியே. ஆதலால் பெரிய எதிர்ப்பார்ப்பு ஒன்றும் இல்லாமல் சென்றேன்.

ஆனால் இப்பொழுது இப்படம் 3
Dயில் பார்த்த அனுபவத்தை, வர்ணிக்க வார்த்தையை தேடிகிறேன். பெயர் போடும் டைட்டில் கார்டில் தொடங்கி முடியும் வரை அனைத்தும் 3Dயே. அந்த அனுபவத்தை உங்களுக்கு வார்த்தகளால் ஒரளவேனும் கடத்த முயற்சிக்கிறேன். 3Dயின் பயனால் நாமும், கதையில் வரும் கதாபாத்திரத்துடன் அவர்களுடன் பயனித்த அனுபவத்தை கொடுத்தது. அனைத்து காட்சிகளும் நாம் அவர்களின் அருகிலிருந்து கண்ட அனுபவத்தை கொடுக்கும். இது ஒரு திரைப்படம் என்ற உணர்வே இல்லாமல் செய்தது. Hats off. இதற்கு முன்பு ICE AGE-4 படத்தை முழு 3Dயில் யோகவ்வுடன் கண்டுள்ளேன், ஆனால் இந்த பிரம்மிப்பு தரவில்லை. ஒரு வேளை, அது கார்டூன் கேரக்டர் என்பதினால் கூட இருக்கலாம். இனி படத்திற்கு போகலாம். இதுவரை நீங்க இப்படத்தைப் பார்க்கவில்லை என்றால் உடனே காணுங்கள், நான் சொல்வதை உணர்வீர்கள். (இந்தியாவில் முழு 3dயாக இல்லை என நண்பர்களின் மூலமாக அறிந்தேன்).

என் நண்பர் மற்றும் அண்டை வீட்டுக்காரர் திரு.செந்தில் சொல்லித்தான் இப்படத்திற்கு செல்ல முடிவானது. ஆங்கிலப் படத்தில் நமக்கு இருக்கும் பெறும் பிரச்சனையே ஆங்கிலம்தான்JJJ :) ஔவையார் ஆரம்ப பள்ளியில் படித்ததின் காரணமாக, ஆங்கில சப்-டைட்டில் இல்லையென்றால் நமக்கு சங்கு தான். தூள் படத்தில், விவேக் சொல்ற மாதிரி படமாடா முக்கியம், காட்சிய பார்ரா வகையரா தான், நான். இங்கு அரபி சப்-டைட்டில் வேற போடுவாங்க, என் நிலையை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். இது இந்தியர்கள் பேசும் ஆங்கில படமாதலால் தன்யனானேன். JJJ :) அவங்களும் நம்ம பட்லர் இங்கிலீஷ் தான் பேசுறாங்க, என்னை போல.


Yann Martel என்ற எழுத்தாளரின் ‘Life of pi’ நாவலை தழுவிய படம். பொதுவாக நாவலை திரைப்படமாக எடுத்தால், படிக்கும்போது கொடுக்கும் பிரம்பிப்பை கொடுக்க தவறவிடுவார்கள் எனற கருத்துண்டு. மேலும் அந்த நாவலாசிரியரின் எண்ணத்தை, மையத்தை தொலைத்துவிடுவார்கள். ஆனால் இந்த படத்தில், நாவலில் என்ன இருக்குமோ அதை அப்படியே இம்மி பிசகாமல் திரையில் அப்படியே கடத்திய அருமையான படம். உடனே ’துப்பறியும் சாம்பு’ மாதிரி, நீ படிச்சியா என்று என்னை கேட்கக்கூடாது. ஆத்தா, கண்னை குத்திடும் :) :) சாக்குரதை JJJ :). என் பதிலை முடிவில் சொல்கிறேன். இன்னுமாடா கதைக்கு போகலைன்னு கேட்கப்படாது, ஆங்...!!!

கதையை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். தன் பெற்றோருடன் சிறுவயது பகுதியை ஒன்றாகவும், கடலில் தனியாக தத்தளிக்கும் பகுதியை இரண்டாகவும், இறுதியாக பை மீண்ட கதையை ஜப்பான் இஸ்சூரன்ஸ் நபர்களிடம் விவரிக்கும் பகுதி என சொல்லலாம். இதில் என்னை ஆட்டிப்படைத்தது மூன்றாம் பகுதி தான். விரிவாக கீழே...!

 

(Pi) பை’யிடம் ஒரு அற்புதமான (கடவுள் இருப்பின்) கதை இருக்குமென்று பையின் மாமா கூறியதாக ஒரு உள்ளூர் கனேடிய எழுத்தாளன் அனுகுகிறான். பை’ தன் பால்ய நாட்களை, தான் கடந்து வந்த கதையை கூறுவதே முழுப்படம். கதையின் நாயகன் சிறுவன் பை, அவன் அண்ணன் ரவி, பாண்டிச்சேரியில் விலங்கியல பூங்கா (Zoo) ஒன்றை நடத்திவரும் பையின் பெற்றோர்கள் என ஒரு அழகிய குடும்பம் பையுடையது. பையின் பெயர்காரணம் சுவாரஸ்யமானதும் கூட. தனது மாமா, பிரான்சில் உள்ள Piscine Molitor என்ற ஒரு நீச்சல்குளத்தால் ஈர்க்கப்பட்டு இவருக்கு Piscine Molitor Patel என பெயரிடுகிறார். சிறுவயதில் எல்லோரும் இவனை பிஸ்ஸிங், பிஸ்ஸிங் படேல்’ என்று கிண்டலடிக்க இவன் தன் பெயரை Pi patel என மாற்றிக்கொள்கிறான். கணிதத்தில் ’π’ (pi) என்றால் முடிவடையாத ஒரு நெம்பர் என்று பொருள்படும். படத்தின அடிநாதத்திற்கும் இதற்கும்கூட சம்பந்தம் உண்டு.

தன் தந்தை ஒரு நாத்திகவாதி மற்றும் எதையும் அலசி ஆராய்ந்து, பிரித்து பார்த்து, அறிவியல் ரீதியாக பொருள் கொள்பவர். தன் மகன்களுக்கும் அவ்வாறே கற்றுத் தருகிறார். பை பிறப்பால் ஹிந்துவாக இருந்தாலும், தன் 12ஆம் வயதில் கிருஸ்துவமும், இஸ்லாமும் அறிமுகமாகிறது. இளம்வயதிற்குரிய கேள்விகளுடன் அனைத்து கடவுளையும் நேசிக்க்கிறான்’; அதனால் அனைத்து மதத்தையும் ஒரே சமயத்தில் பின்பற்ற தொடங்குகிறான். மென் நகச்சுவையாக அருமையாக காட்சிப்படுத்திருக்கிறார்கள்.
 

பையின் பெற்றோர்கள், குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வேண்டி, கனடா சென்று விலங்குகளை விற்றுவிட்டு குடியேர திட்டமிடுகிறார்கள். ஜப்பான் கப்பலொன்றில் அனைவரும் பயனிக்கிறார்கள். எதிர்பாரா விதமாக இரவு நேரத்தில் தாங்கள் பயனித்த கப்பல் புயலில் சிக்குகிறது. தன் துடுக்குதனம் காரணமாக புயலைக்காண, கப்பலின் மேல்தளத்தில் வரும் பை, கப்பலுக்கு சிக்கலென்று உணர்கிறான். தன் குடும்ப நபர்களை காப்பாற்ற எண்ணுகையில் கப்பல் சிப்பந்திகள் இவனை லைப் போட்டில் (Life Boat) தூக்கிவீசுகிறார்கள்.  தற்செயலாக அடிப்பட்ட வரிக்குதிரை அதே படகில் விழுந்து பயணிக்கிறது. ஒரு சில வாழைப்பழ கொத்தில் ஓரங்குட்டானும் தப்பி இதே படகில் பையிடம் வந்தடைகிறது. 

 

தன் குடும்பத்தை காப்பாற்ற முடியா துயரத்தில் பை, இரவு முழுதும் படகின் பாதி மூடப்பட்ட தார்பாயின் மேலே படுத்து அழுது உருகுகிறான். அடுத்த நாள், திடீரென அதன் அடியில் இருந்து ஓநாய் வெளிவந்து, வரிக்குதிரையையும் ஓரங்குட்டானையும் பசிக்காக சாகடிக்கிறது. யாரும் எதிர்பாரா நேரத்தில் ரிச்சர்ட் பார்க்கர் என்ற வங்கால புலி ஒன்று அதே தார்பாயின் அடியில் இருந்து வந்து நரியை கொல்கிறது. இப்பொழுது மிஞ்சிருப்பது புலியும், பை என்ற 16வயது சிறுவன் மட்டுமே. 
புலி பை’யை கொல்ல காத்திருக்க, ஒரு சிறு மிதவையை தயாரித்து அந்த படகின் கூடவே பயனிக்கிறான். இப்படியே செல்லும் பயணத்தில் புலியை அடக்க கற்றுக்கொள்கிறான். ஒரு உயிரின விழுங்கித் தீவில் இருந்தும் தப்பித்து, எப்படி தன்னை காத்துக்கொண்டு 227 நாட்கள் புலியுடன் வாழ்ந்து மீண்டு மெக்சிக்கோ நாட்டிற்கு வந்தான் என்பதே மீதிப் படம். 


மெக்சிக்கோ நாட்டில் கரையொதுங்கி சிகிச்சை பெரும் பையிடம், ஜப்பான் நாட்டு இன்சூரன்ஸ் நபர்கள் கப்பல் கவிழ்ந்த காரணத்தை கோருகிறார்கள். கப்பல் எப்படி கவிழ்ந்தது என சிறுவனான தனக்கு தெரியாது என்றும், தான் சந்தித்த (மேலே சொன்ன) அனைத்தையும் சொல்கிறான். காப்பீட்டாளர்கள், இது எல்லாம் நம்ம முடியா கதையாக இருக்கிறது, ஏனெனில் வாழைப்பழம் மிதக்காது, அதனால் ஓரங்குட்டான் வந்திருக்க வாய்ப்பில்லை எனவும், புலியுடன் 227 நாட்கள் வாழ்வது சாத்தியம் இல்லை எனவும், உயிரின விழுங்கி தீவு ஒன்று உலகத்தில் இல்லை எனவும் சொல்கிறார்கள். காப்பீட்டாளர்கள், தாங்கள் பைக்கு உதவ வந்துள்ளதாக கூறி, நம்பும்படியாக உண்மையை சொல்லச் சொல்கிறார்கள்.

உடனே பை, இன்னொரு சுவாரஸ்யமில்லாத கொடூரமான கதை சொல்கிறான். தானும், தன் அம்மாவும் லைப் போட்டில் படகில் தப்பித்ததாகவும், அதே படகில் கால் உடைந்த மற்றொரு பயணியும், கப்பல் சமையல்காரனும் இருந்தார்கள் எனவும் கூறுகிறான். சமையல்காரன், கால் உடைந்த பயணியை கொன்று இரையாக்கினான் எனவும், பின்னொரு சண்டையில் தன் அம்மா தன்னை படகின் ஒரத்திற்கு போகுமாறு கூறியதாகவும், அச்சம்பவத்தில் தன் அம்மாவை சமையல்காரன் கடலில் தள்ளிவிட்டான் எனவும், உடனே பை தன் கையில் இருந்த கத்தியை கொண்டு சமையல்காரனைக் கொன்று, மனித மாமிச உண்டு, தான் தப்பி மெக்சிக்கோ கரை ஒதுங்கியதாக கூறுகிறான். ஜப்பான்கார்ர்கள் ஒன்றும் சொல்லாமல் எழுந்து செல்கிறார்கள். பை தன் கதையை கனேடிய நாவலாசிரியரிடம் சொல்லி முடிக்கிறான். 


 இங்குதான் நான் முதல் பத்தியில் கூறிய விடை தெரியா, என்னை உலுக்கிய சம்பவம் வருகிறது. நாவல் ஆசிரியன் பையிடம், இரண்டாவது சொன்ன கதையில் வரிக்குதிரையாக அந்த சகபயணி, ஓரங்குட்டானாக உன் தாய், ஓநாயாக சமையல்காரன், ரிச்சேர்ட் பார்க்கர் என்ற வங்கால புலியாக நீயா (பை) என கேட்கிறான்.

அதற்கு பை பதில் அளிக்காமல், நான் கூறிய இரண்டு கதைகளிலும், கப்பல் கவிழ்கிறது, என் குடும்பம் இறக்கிறது, நான் தத்தளிக்கிறேன், பின்பு மெக்சிக்கோவில் கரை ஒதுங்குகி உயிர் பிழைக்கிறேன் என கூறுகிறான். உனக்கு எது வேண்டும் என முடிவு நீயே எடுத்துக்கொள், என ஆசிரியரிடம் கூறுகிறான். அதற்கு ஆசிரியன், புலி இருக்கும் கதையை விரும்புவதாக சொல்ல, பை கூறும் வாக்கியம் and so it goes with God’. பிறகு நாவலாசிரியன் ஒரு ஆர்வ மிகுதியில் இஸ்சூரன்ஸ் ஃபைலை எடுத்து, அவர்கள் என்ன தீர்ப்பு எழுதிருக்கிறார்கள் என பார்க்கிறான், அதிலும் புலியுடன் 227 நாட்கள் உயிர் வாழ்ந்து தப்பிக்கிறான் பை என முடிகிறது படம்.


இந்த கதையில் என்ன இருக்கிறது என்றால், இதை எப்படி காட்சிப் படுத்திருக்கிறார்கள் என்பதில் தான் சூட்சமமே.. ஒவ்வொரு நாள் முடிந்த பின்னும், பையின் உடல்மொழி மாற்றம், பேச்சின் வீரியம் குறையும் தன்மை, விசில் ஊதும் சத்த்தின் ஓசை என பார்த்து பார்த்து செதுக்கிருக்கிறார்கள். இதை திரையில் கண்டால்தான் உணர முடியும். நீங்க பலபேர் உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன். மேலும் அந்த புலி ஒரு கிராப்பிக்ஸ் புலி, சத்தியமா நம்ப மாட்டோம். அவ்ளோ ஒரிஜினல் போல இருக்கு & மேலே சொன்னது போல் 3D.

இவை அனைத்திற்கும் மேலே, நான் குறிப்பிடும் விடை தெரியா கேள்விகள் நிறைந்த கடைசி பகுதி.... அவரவர் எண்ண ஓட்டத்திற்கு முடிவை தேர்தெடுத்துக்கொள்ளலாம். நன்றாக கவனித்தால், பை இறுதியில் எது உண்மை, எது பொய் என்று கூறுவதில்லை. உனக்கான முடிவை நீயே எடுத்துகொள் என்றுதான் நாவலாசிரியரிடம் சொல்கிறான். பகுத்துத்தறிவோடு பார்த்தால், 227 நாட்கள் பசியுடன் இருக்கும் ஒரு வங்கால புலியுடன் வாழ சாத்தியமே இல்லை, அதுவும் ஒரே படகில். ஆகையால் அவன் சொல்லும் இரண்டாம் கதைக்கான சாத்தியம் தான் ஜாஸ்தி. அறிவியல் என்பது மறுக்கமுடியா உண்மை. எதையும் பிரித்து பார்த்து நிறுபித்த ஒன்று. தன்னில் இருக்கும் மிருகம் வெளிவந்து, சைவமானவன் மனித மாமிசம் உண்டு உயிர் பிழைத்தான் என்பதே ஏற்புடையதாக இருக்கும்.

Director, Irfan Khan, Thabu, Suraj Sharma
இல்லை, முதல் கதை போல நடக்க சாத்தியம் இருக்குமென்றால், Believing the Unbelievable என்பதில் உடன்பாடு கொண்டவராவோம். அதனால் தான் ‘and so it goes with God’ என்று பை இறுதியில் கூறுகிறான்.  நமக்கும் மேல் ஒன்று இருக்கு என்ற சக்தி, ஞானம்.

காதல் போல, கடவுளும் கண்ணுக்கு புலப்படாதவர் என பொருள் கொள்ளலாம். எல்லாவற்றிக்கும் அறிவியலை திணிக்காமல், உ.தா காதல் என்பது மூலையில் ஓடும் திரவியம் என்று கூறாமல், அது ஒரு புலப்படாத உணர்வு எனலாம். பை (22/7) என்பதே கணித்ததில் முடிவில்லா மிஸ்டரி நம்பர். அது போல நம் வாழ்க்கையில் இருக்கும் பல விடை தெரியா முடிச்சுகள் கொண்டது...!!!

துபாயில் ரிக்கார்ட் ஹிட் இந்த படம். கிட்டத்தட்ட இரண்டு மாதம் தாண்டியும் இன்னும் சக்கப்போடு போடுகிறது, அரங்கம் நிறைந்த காட்சிகளோடு. மேலும் இப்படம், 11 ஆஸ்கார் அவார்ட்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நீங்க இதுவரை இப்படத்தை காணவில்லையென்றால் உடனே காணுங்கள்.