செவ்வாய், 11 டிசம்பர், 2012

Maryada Ramanna - Telegu Movie Review

மரியாதை ராமண்ணா - தெலுங்கு படம்

ஒரு மாறுதலுக்காக என்னை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த தெலுங்கு படம் உங்களுக்ககாக பகிர்கிறேன். இந்த படம் பார்க்க தூண்டும் முதல் காரணி, நம்ம ‘நான் ஈ’ பட புகழ் இயக்குனர் S.S. ராஜமௌலி 2010ல் இயக்கி வெளிவந்த படம். இதுவரை இவர் இயக்கிய அனைத்து படங்களுமே தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டுகள் தான். ஒரு காமெடியான நடிகர் சுனிலை ஹீரோவாக்கி தெலுங்கில் கலக்கியெடுத்த படம்.

இப்படம் மராட்டி, பெங்காலி, சமீபத்தில் சன் ஆப் சர்தார் என ஹிந்தியில் ரீமேக்கிய படம். நம் நடிகர் விவேக் கூட , தமிழ் ரீமேக்கில் நடிப்பதாக கேள்விப்பட்டேன்.

கதையென்று பார்த்தால், அரதப்பழசான பலிக்கு பலி கதைதான். படத்தின் முதல் 10 நிமிடம் பார்த்தால், என்னடா இது....??? இதையா இவன் இப்படி சிலாகித்து எழுதினான் என என்னை காரி துப்புவீர்கள். அதே கிராமத்து குடும்ப தகராறு, மச்சான் மாப்பிள்ளை வெட்டு குத்து சண்டை, பகைக்கு பயந்து குழந்தையுடன் தாய் வெளியூருக்கு ஓட்டம், பின்பு ஹீரோவின் ஏழ்மை என அனைத்தும் கிளிஷே காட்சிகளாக இருக்கும்.

ஆனால் ஹீரோவான சுனில், கிராமத்தில் தனது அன்னைக்கு சொந்தமான ஒரு இடம் இருக்கு என தகவல் அறிந்தவுடன், அதை விற்று தன் ஏழ்மையை சிறிது போக்கிக்கொள்ளலாம் என ஊருக்கு கிளம்பும் போது ஆரம்பிக்குது சரவெடி.

தன் சொந்த ஊரான ராயலசீமா பகுதிக்கு 27 வருடம் கழித்து செல்கிறார். (ராயலசீமா என்பது நம் படத்தில் காட்டும் மதுரை போல, எதற்கெடுத்தாலும் கத்தி, வீச்சு, அரிவால் என் தெலுங்கில் ஃபேமஸ்). அங்கு தன் தம்பியை கொன்ற குடும்பத்தை வேருடன் அறுத்து பலி வாங்க 27 வருடம் காத்திருக்கும் ஊர் பெரியவரான வில்லனனிடமே (Nagineedu) போய் நிலம் விற்க உதவி கேட்டு, அவர் வீட்டிற்கு விருந்திற்கு செல்லும் போது இருந்து நம் வயிறு பதம் பார்க்க ஆரம்பித்துவிடும்.

கற்பனை செய்து பாருங்கள். ஒரே ஒரு வீடு, மொத்த படத்தையும் சிறிதும் போர் அடிக்காமல் நகர்த்த செம சாமர்த்தியம் வேண்டும். அதை அலாட்டாக செய்து ஜெயித்தார்கள்.

வில்லனுக்கு ஒரு பிரத்தேக குணமுண்டு. தன் வீட்டிற்கு எதிரியே வந்தாலும், நன்கு உபசரித்து வாயார புகழுமாறு உபசரிப்பார். வீட்டின் வாசப்படியை தாண்டியவுடன் தான் அருவாளை எடுப்பார். இதை ஹீரோ தனக்கு சாதகமாக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் அடிக்கும் கூத்துக்கள் தான் முழுப்படமே.


தான் இத்தனை வருடம் காத்திருப்பது நம் வீட்டில் இருப்பருக்கு தான் என வில்லனுக்கு தெரிந்தபின், இந்த இருவர் விளையாடும் Cat and Mouse விளையாட்டே முழுப்படமும். இதில் ஹீரோ வெளியேறாமல் இருக்க செய்யும் சேட்டைகள், அதனால் வில்லன் பெண் தன்னுடன் காதல், அதில் ஏற்படும் கலாட்டா, விடாப்பிடியா வீட்டின் உள்ளேயே சாக்கு போக்கு சொல்லி தங்கும் ஹீரோவின் சாமர்த்தியம், வில்லன், வில்லனின் மகன்கள் இவரை வெளியே செல்ல வைக்கும் செயல்கள் என அனைத்தும் செம காமெடி. ஒரு முழுநீல ஆக்‌ஷன் பட ஸ்கோப் இருந்தும் அதை அப்படியே உல்டா செய்து ஜெயித்த படம்.

அனைவரின் நடிப்பும் அவ்வளவு அருமை. குறிப்பாக அந்த வயதான வில்லன் தான் என்னை மிகவும் கவர்ந்தவர். என்னா ஒரு மாடுலேஷன், பாடி லேங்குவேஜ், சூப்பர் நடிப்பு.....இப்படம் ஆந்திர அரசின் (2010) சிறந்த பொழுதுபோக்கு படமாகவும், சிறந்த வில்லன் நடிப்பிற்கும், சிறந்த பாடகர், சிறப்பு நடுவர் விருது என நான்கு விருதுகளை அள்ளியது.

நீங்களும் நிச்சயம் ரசிப்பீர்கள். கண்டிப்பாக பாருங்கள்.

3 கருத்துகள்:

  1. அருமையான படம் எல்லாரும் கண்ணீர்வர வயிறு வலிக்க சிரிக்கவைக்கும் படம்.....கண்டிப்பாக பாருங்கள்.....

    நீத்தோட ரிவ்யூ பாக நச்சிந்தீ.....

    ஃபேஸ்புக்கிக்கீ பைல தேரிதா.... !!!!
    இக்கட ரா நானா.....!!!

    பதிலளிநீக்கு
  2. ஹஹஹ்ஹஹ.. ’இக்கட ரா நானா’ ஆனந்த சொன்னது போல, வயிறு வலிக்கு நான் பொறுப்பாலி அல்ல... :) :) :)

    பதிலளிநீக்கு
  3. படம் சூப்பரா இருக்கும் போலனா. அதுவும் ஒரு வீட்டுக்குள்ளே வச்சு ஒரு படத்த எடுகுரதுகே திறமை வேணும்......

    பதிலளிநீக்கு